பாஜ தர்ணாவால் கர்நாடக பேரவை முடங்கியது

பெங்களூரு: காங்கிரஸ் அரசின் ஐந்து உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கர்நாடக பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக 16வது சட்ட பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 3ம் தேதி தொடங்கியது. நேற்று காலையில் அவை கூடுவதற்கான அழைப்பு மணி ஒலிக்கப்பட்ட போதே பாஜவினர் சபாநாயகர் இருக்கை முன்பு குவிந்தனர். காங்கிரஸ் அரசின் 5 திட்டங்களை அமல்படுத்தக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான பாஜவினர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு