ஒன்றிய பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் நன்றி கடிதம்

சென்னை: ஒன்றிய பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட மசோதாவை திமுக எதிர்த்ததற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதம்: ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவிற்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக பாராட்டுக்களை பதிவு செய்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான ஆதரவை தாம் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது