அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திய பாஜக?.. தமிழ்நாட்டில் தனி அணியாக களம் காண பாரதிய ஜனதா கட்சி முடிவு?

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே அதிமுக-பாஜக கூட்டணி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது. அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தரப்பில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என அதிமுக திட்டவட்டமாக கூறி வந்தது. பாஜக தரப்பில் 4 மத்திய அமைச்சர்கள் அதிமுக தலைமையுடன் பேசி வந்ததாகத் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக உடன் மறைமுகமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 தொகுதிகளில் பாஜகவும் மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்க திட்டம். தற்போது வரை புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளன.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை