பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

சாகிப்கஞ்ச்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை நில மோசடியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனை கடந்த 28ம் தேதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களுக்கு எதிராக போராடிய பழங்குடியின வீரர்களின் நினைவு தினம் சாகிப்கஞ்ச் மாவட்டம்,போக்னாதிஹ் என்ற இடத்தில் நேற்று நடந்தது.

இதையொட்டி நடந்த பேரணியில் பங்கேற்ற ஹேமந்த் சோரன் பேசுகையில்,‘‘ பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சந்தால் புரட்சியை போல,ஜார்க்கண்ட் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள நில பிரபுத்துவ சக்திகளை விரட்டியடிப்போம் என உறுதி கூறுகிறேன். இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றும். நான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால் பாஜ தலைவர்கள் என்னை பார்த்து கலக்கமடைந்துள்ளனர். என் மீது பொய்யான வழக்கை போட்டுள்ளனர். புரட்சியாளர்களுக்கு பெயர் போன மாநிலம் ஜார்க்கண்ட். சிறை, லத்தி மற்றும் மரண தண்டனை என எதற்கும் அஞ்ச மாட்டோம்’’ என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு