பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை கங்கனாவை விமர்சனம் செய்தாரா காங்கிரஸ் தலைவர்? இணையதளத்தில் வெடித்த சண்டை

புதுடெல்லி: இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை கங்கனாவை காங்கிரஸ் பெண் தலைவர் சுப்ரியா விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இமாச்சலபிரதேசம் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷிரினேட்டின் இன்ஸ்டாகிராம் தளத்தில் கங்கனாவின் ஆபாச படத்துடன் ஒரு ஆட்சேபகரமான கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கங்கனா ரனாவத்தின் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்து கூறியிருப்பதாவது; ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியம் உண்டு. அன்புள்ள சுப்ரியா , ஒரு கலைஞராக கடந்த 20 வருட வாழ்க்கையில் நான் எல்லா வகையான பெண்களிலும் நடித்தேன். ஒரு அப்பாவி பெண் முதல், ஒரு மயக்கும் உளவாளிக்கு ராணி, மணிகர்ணிகாவில் ஒரு தெய்வத்திலிருந்து சந்திரமுகியில் ஒரு அரக்கன் வரை, ரஜ்ஜோவில் ஒரு விபச்சாரியாகவும், தலைவியில் ஒரு புரட்சிகரத் தலைவர் வரை நடித்தேன். தப்பெண்ணங்களின் பிடிகளிலிருந்து நாம் நம் மகள்களை விடுவிக்க வேண்டும்.

அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தைத் தாண்டி உயர வேண்டும். அனைத்திற்கும் மேலாக பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை ஒருவித துஷ்பிரயோகம் அல்லது அவதூறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு இளைஞனுக்கு தேர்தலில் போட்டியிடும் சீட் கிடைத்தால் அவனது சித்தாந்தம் தாக்கப்படும். ஒரு இளம் பெண் சீட் கிடைத்தால் அவளது பாலுணர்வு தாக்கப்படுகிறது. விசித்திரம். மண்டி என்னும் ஒரு சிறிய நகரத்தின் பெயரை காங்கிரசார் அவமதிக்கிறார்கள். மண்டியில் ஒரு இளம் பெண் வேட்பாளர் இருப்பதால், அவருக்கு எதிராக பாலியல் கருத்துகளை வெளிப்படுத்தியது அவமானம்’ என்று ரனாவத் பதிவிட்டுள்ளார்.

Related posts

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்