பாஜவின் பிரியாணி கூட்டமும்… தூக்கமும்…

தமிழகம் முழுவதும் பாஜவினர் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் காத்துவாங்குவதால் கிராமங்களில் இருக்கும் நூறூநாள் வேலை தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிக்கு உட்பட்ட காரைக்குடியில் பாஜ கூட்டணி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக புதுஆடை மற்றும் பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டத்தில் பாஜ கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பேசி முடித்த பிறகு வந்திருந்தவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

தங்கள் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பிரியாணி வழங்க மாட்டோம் என்று பாஜ தலைவர்கள் கூறி வரும் நிலையில் பிரியாணிக்காக போட்டி போடும் வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கீழ் படம்: கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜ தலைவருமான அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரைமணி நேரத்திற்கும் மேலாக அவர் தொடர்ந்து ராகம் பாடினார். இதனால் அருகில் இருந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உண்ட மயக்கத்தாலும் அண்ணாமலையின் இதமான உளறல்களாலும் உறங்கி வழிந்தனர். இருப்பினும் தனது உளறல்களை அண்ணாமலை தொடர்ந்தார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!