உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு ‘ஷாக்’.. சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை; அயோத்தியில் பாஜக பின்னடைவு!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது . நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்துடன், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 42 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. உ.பி.யில் இண்டியாவின் முக்கிய கட்சியான சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னணியாக உள்ளன. என்டிஏவில் பாஜக 34, அப்னா தளம் 1-ல் முன்னணி வகிக்கின்றன. ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். என்டிஏவிற்காக வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணி வகிக்கிறார். அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூரில் முன்னணி வகிக்கின்றனர்.

இண்டியாவில் முக்கிய தொகுதிகளில் காங்கிரஸ் ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் முன்னணி வகிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கன்னோஜிலும், அவரது மனைவியாக டிம்பிள் சிங் யாதவ் மெயின்புரியிலும் முன்னணி வகிக்கின்றனர். சுல்தான்பூரின் பாஜக எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவரை எதிர்த்து சமாஜ்வாதிக்காகப் போட்டியிடும் ராம்புவால் நிஷாத் முன்னேறி வகிக்கிறார்

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு