பாஜவுடன் கூட்டணி வைக்க என்னை நிர்பந்தம் செய்தார்கள்: போட்டு உடைத்த பிரேமலதா

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 5 இடங்களில் போட்டியிடுகிறது. அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  விழுப்புரம், ஆரணி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அதிமுக, தேமுதிக இயற்கையாக அமைந்த கூட்டணி. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக அதிமுக, தேமுதிக உள்ளது. என் கண்ணீரையோ சோகத்தையோ யாரிடமும் சொல்வது கிடையாது.

ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்றபோது விஜயகாந்த் செய்த திட்டங்கள் நினைத்து கண்ணீர் விட்டேன். விஜயகாந்த் இல்லாமல் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்ெகாள்வது மனம் வலிக்கிறது. விஜயகாந்த் மறைவின்போது மக்கள் 2 நாள் சாப்பிடாமல் வீட்டிலேயே முடங்கி டி.வி.முன்பு அமர்ந்திருந்தார்கள். சாதியை நம்பி உள்ளவர்களையும், மதத்தை நம்பியுள்ளவர்கள் யாரும் நமக்கு வேண்டாம். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார்கள். ஆனால் தொண்டர்கள் அவர்களுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று உறுதியாக இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம்,’என்றார்.

Related posts

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை