தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் உண்மை தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது மாற்றுக்கட்சியினர் நமக்கு எதிராக செயல்படும் செயல்களை முறியடிக்க வேண்டும். அதிமுகவை வீழ்த்த நினைப்போருக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி அதிமுக, அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. மேடை பேச்சை கேட்டு படிப்படியாக உயர்ந்து கட்சியின் உயர்பதவிக்கு வந்துள்ளேன்.

அடிமட்ட தொண்டனும் மேடையில் அமரக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டுமே; அதற்கு நானே சாட்சி. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும். பணத்தை கொடுத்து வாக்குகள் பெற முடியும் என்ற கனவை முறியடிக்க வேண்டும். வாக்காளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவது நமது கடமை. மாநில உரிமையை காக்க அதிமுக போராடும். தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் இவ்வாறு கூறினார்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி