பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது: திருச்சி சிவா விமர்சனம்

டெல்லி: பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது என திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சனம் செய்துள்ளார். 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து 7-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது. பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அதில்,

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக கண்டனம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை.ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து ஒன்றிய பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை.

பாஜக அரசின் அணுகுமுறை முன்பைவிட மோசமாக உள்ளது”

பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது: திமுக

பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களில் வஞ்சிப்பதை ஏற்க முடியாது. குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பாஜக அரசு அரசியல் நலனை மட்டுமே பார்க்கிறது; மக்கள் நலனை பார்க்கவில்லை. போராடி நாட்டை காக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை