பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே விரைவில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே விரைவில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது;
பாஜக உடனான தொகுதி பங்கீட்டு கூட்டம் சுமூகமான முறையில் முடைந்தது. தேர்தலுக்கான எண்ணிக்கைகள், எந்த தொகுதி, வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள், அதிக வெற்றி வாய்ப்பு பெறுவதற்கான நல்ல சூழல், அதற்க்கு ஏற்றவாறு கள பணி இவைகள் குறித்து இந்த கூட்டத்தில் மிக நுட்பமாக ஆலோசனை செய்தோம். மீண்டும் அவர்களுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். விரைவில் முடிவுகள் எடுக்கப்படும்.

இன்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளது. எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வு எல்லா கட்சிகளுக்கும் இருக்க கூடிய காரணத்தால் வெற்றிபெறக்கூடிய நிலையை எல்லா கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்து, அதற்கு ஏற்றவாறு கூட்டணி கட்சி தலைவர்களுடன் மிக நுணுக்கமாக தொகுதிகளின் எண்ணிக்கையை பற்றி பேசி வெற்றியை உறுதி செய்வதற்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமான பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையின் முடிவு மன நிறைவாக இருக்கும். பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என அவர் கூறினார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!