ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமீபத்தில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது.

இதில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டுமே தவிர, மேடையில் மீனவர்களுக்காக முழங்குவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை செய்வதற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தர முடியாத பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக பரிந்து பேசுவதை விட ஒரு துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக மீனவர் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசோடு பேசி மீனவர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த உரிய பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதி செய்ய வேண்டும்.

இலங்கை அரசோடு கடுமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினாலொழிய தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியாது.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி