பாஜ எம்.பி மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு பிறகே எப்ஐஆர்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பாஜ எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பதிலளிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,டெல்லி காவல்துறை சார்பாக நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக சில ஆரம்ப கட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டி இருக்கிறது.

அதற்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்” என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் நீதிமன்றத்திற்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனால் ஒன்றிய அரசிடம் தற்போது என்ன தகவல்கள் இருக்கிறதோ அதனை தாக்கல் செய்யுங்கள். பின்னர் வரும் 28ம் தேதி விசாரணையின் போது பார்த்துக்கொள்ளலாம்,” என தெரிவித்தார்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்