பாஜ வென்றால் இனி தேர்தல் இருக்காது; திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு: முருகவேல் ராஜன் உறுதி

மக்கள் விடுதலைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில், கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முருகவேல்ராஜன் தலைமை வகித்தார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
2019ம் ஆண்டு முதல் திமுகவுடன் மக்கள் விடுதலைக் கட்சி பயணித்து வருகிறது. பாஜவை புறக்கணிக்க, தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க, இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். 2024 தேர்தலில் மோடி (பாஜ) வெற்றி பெற்றால் வரும் காலங்களில் பொதுத்தேர்தல் நடைபெறாது. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறை வரும். பிரதமர் மோடி தன்னை அதிபராக அறிவித்து கொள்வார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மதவாத சர்வாதிகார நாடாக மாறக்கூடும். மக்கள் விரோத மோடி ஆட்சியை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும். சர்வாதிகார வலதுசாரி அரசியலை ஒன்றியத்தில் அனுமதித்தால், சிறுபான்மை சமுதாயங்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் மிகப்பெரும் துன்பத்தை அடைய நேரிடும். இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். முதல்வருடன் நடைபெறும் சந்திப்பில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போம்.

முதல்வர் அனுமதி அளித்தால் தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு கூறினார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்