சமூக வலைதளங்களில் பாஜ- காங். போஸ்டர் யுத்தம்

புதுடெல்லி: ராகுல் காந்தி எம்பியை புது யுக ராவணன் போல் சித்தரித்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி, அமித் ஷா ஆகியோரின் படங்களை வெளியிட்டு,அதற்கு கீழே, மிக பெரிய பொய்யர்,விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல உள்ள வெற்று வாக்குறுதி வாலிபர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜ கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில்,ராகுல் காந்திக்கு பல தலைகள் இருக்கும் விதமாக படத்தை வெளியிட்டு அதன் கீழே ஆபத்தில் இருக்கும் பாரதம்,இது புது யுக ராவணன், இவர் இந்து தர்மம் மற்றும் ராமருக்கு எதிரானவர், பாரதத்தை அழிப்பதே இவருடைய நோக்கம் .

இது காங்கிரஸ் கட்சியின் தயாரிப்பு, இயக்குனர் ஜார்ஜ் சோரோஸ் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ராகுல் காந்தியின் தந்தை மற்றும் பாட்டி நாட்டை பிளவுபடுத்த முயற்சித்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் நோக்கத்துடன் தான் இது போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஏற்றுகொள்ள முடியாதது மட்டுமல்ல,மிகவும் ஆபத்தானதும் கூட என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!