பாஜ வேட்பாளர் பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்; நான் டாக்டர் வேலைக்கே போறேன்… அரசியலை விட்டு விலகுவதாக ஹர்ஷ் வர்தன் எம்.பி அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போது டெல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்.பியுமான ஹர்ஷ் வர்தன் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக புதுமுகத்துக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மீண்டும் சாந்தினி சவுக் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த ஹர்ஷ் வர்தனுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.

இந்நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக ஹர்ஷ் வர்தன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தன் ட்விட்டர் பதிவில், “30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் பயணித்துள்ளேன். 5 சட்டப்பேரவை, 2 மக்களவை தேர்தல்களில் பெரும் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்றுள்ளேன். பாஜ கட்சியிலும், மாநில, ஒன்றிய அரசுகளிலும் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்துள்ளேன். நான் மீண்டும் டாக்டர் தொழிலை கவனிக்க உள்ளேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு