பாஜக கூட்டணியில் ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டி

அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா என்ற ஊசலாட்டத்தில் இருந்தார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். கடைசியில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். அங்கு நெல்லை தொகுதியை கேட்டார். அது நைனார் நாகேந்திரனின் மகனுக்குத்தான் என்று பாஜக கைவிரித்து விட்டது. இதனால் விருதுநகரில் சீட் கேட்டார்.

அங்கு தான் சார்ந்த சமூக வாக்கும், மனைவி ராதிகா சார்ந்த தெலுங்கு ஓட்டும் அதிகமாக உள்ளதால், அந்த தொகுதி வேண்டும் என்றார். அங்கு பாஜகவின் ராமசீனிவாசன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கியிருந்தார். கடைசியில் கூட்டணியில் சரத்குமார் சேர்ந்ததால், அவரது மனைவி ராதிகாவை அங்கு நிறுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த முடிவால் ஒரு வாரமாக ராமசீனிவாசன் கடும் அப்செட்டாம். அதேநேரத்தில் வெள்ளைச் சட்டை போட்டு வந்தாலே நம்மை விட நல்ல வளர்ந்திடுவானோ என்று தடுக்க முயற்சிக்கும், அண்ணாமலை, ராமசீனிவாசனை எப்படி வளரவிடுவார் என்கின்றனர் பாஜகவினர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு