பிஜேடிக்கு விழுந்த பெரிய அடி.. ஒடிசாவில் சட்டமன்ற, மக்களவை தேர்தல்களில் வெற்றி கனியை ருசிக்கும் பாஜக!!

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பின்னடைவை சந்தித்து வருவதால் அங்கு பாஜக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில் பாஜக 76 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. ஆளும் பிஜு ஜனதா தளம் 55 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதியிலும் முன்னேறி உள்ளன. இதன் மூலம் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடி ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. 21 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசாவில் 19 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், பிஜேடி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே முதலிடம் வகிக்கின்றன. ஒடிசாவில் பாஜக வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் புவனேஷ்வரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!