பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் 1996 காலக்கட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஞானகுருசாமி. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு பெரியகுளம் அருகே உள்ளது. இவர் நேற்று காலை மாந்தோப்பில் நடக்கும் விவசாய பணிகளை பார்வையிட சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த காட்டெருமை, திடீரென ஞானகுருசாமியை பயங்கரமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்து போனவரை, தொழிலாளர்கள் மீட்டு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டெருமை தாக்கியதில் ஞானகுருசாமிக்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காட்டெருமை தாக்கி மாஜி எம்பி படுகாயம்
previous post