சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.