காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் உயிர் வேதியியல் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்வேதியியல் துறை சார்பில், ‘உயிர் வேதியியல் மற்றும் தாவர வேதியியலில் தொழில்களும் வேலை வாய்ப்புகளும்’ எனும் கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் போஸ் தலைமை வகித்தார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் தயாளன், பொருளாளர் மோகனரங்கன் மற்றும் இயக்குநர்கள் முன்னிலை வகித்தனர்.

உயிர்வேதியியல் துறைத்தலைவர் புண்ணியக்கோட்டி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்து, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக சென்னை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் சென்னை பல்கலைக்கழக மேனாள் கல்வி குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, புரொஜெக்டரின் மூலம் மாணவர்களுக்கு உயிர் வேதியியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கான தொழில்களும் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வேலை வாய்ப்புகளை பற்றி விளக்கி பேசினார்.

தொடர்ந்து, கல்லூரியின் உயிர் வேதியியல் துறையில் சென்னை பல்கலைக்கழக தேர்வில், முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வின் நிறைவாக உயிர் வேதியியல் சுஜாதா நன்றி கூறினார். இந்த கருத்தரங்கினில் கல்லூரி துணை முதல்வர் பிரகாஷ், பேராசிரியர்கள் ஆனந்தன், முனைவர் ஆறுமுகம், பி.ரேச்சல்மேரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது