திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: ஏழுமலையான் கோயிலில் 20 அறைகளில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.5.11 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 347 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 358 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.5.11 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 20 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 20 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை