விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் காற்றினால் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரம், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் நேற்று (26.06.2024) காலை 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றினால் சாய்ந்த விபத்தில் அப்பகுதியில் தள்ளுவண்டியில் இலைகளை ஏற்றிசென்றுகொண்டிருந்த கொடைக்கானல் தெரசா நகரைச் சேர்ந்த அந்தோணிதாஸ் (வயது 55) த/பெ. எட்வர்ட் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்