பேரவையில் நிறைவேற்றம் மாநகர காவல் சட்டங்களில் திருத்த மசோதா

மாநகர காவல் சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். அச் சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: கடந்த 1971ல் மதுரை மாநகராட்சி சட்டம், 1981ல் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம், 1994ல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம், திருநெல்வேலி மாநகராட்சி சட்டம் ஆகியவை 1998ல் தமிழ்நாடு ஊராட்சிகள் அமைப்புகள் சட்டத்தினால் நீக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகர காவல்துறை சட்டம் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு நீட்டிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 1997ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மாநகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம், கோயம்புத்தூர் மாநகரம், மதுரை மாநகரம், திருச்சிராப்பள்ளி மாநகரம், திருநெல்வேலி மாநகரம், மற்றும் திருப்பூர் மாநகரம் ஆகியவற்றின் சொல்களின் பொருள் வரையறைகளுக்கு தகுந்தவாறு திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில், காவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Related posts

2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் சமூக பிரச்னைக்காகவே கருத்து தெரிவித்தோம்: ராமதாஸ், அன்புமணி பதில்

நில மோசடி விவகாரத்தில் நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு