கூட்டு பாலியல் வன்கொடுமை, கூட்டு படுகொலை நிகழ்வுகளை ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிட கூடாது; ஆப்பிள் பழத்தை நீங்கள் ஆரஞ்சு உடன் ஒப்பிடுவீர்களா?.. உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு சிறைவாசத்தின் போது பரோல் வழங்கப்பட்டது குறித்து குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பதினொரு குற்றவாளிகளும் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளுக்கு சிறைவாசத்தின் போது வழங்கப்பட்ட பரோல்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், குற்றத்தின் தீவிரத்தை அரசு பரிசீலித்திருக்கலாம் என்று கூறினார்..

”கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை நிலையான பிரிவு 302 (கொலை) வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பது போல, கூட்டு பலாத்காரம், கூட்டு படுகொலையை ஒரே கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் பொதுவாக சமூகத்திற்கு எதிராக செய்யப்படுகின்றன. சமத்துவமற்றவர்களை சமமாக நடத்த முடியாது என நீதிபதிகள் கூறினார்.

தொடர்ந்து; ”இன்று அது பில்கிஸ் ஆனால் நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். மன்னிப்பு வழங்குவதற்கான காரணங்களை நீங்கள் காட்டவில்லை என்றால், நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுப்போம் என கூறினார்

மார்ச் 27 அன்று, 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானோவின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டது ஒரு “கொடூரமான” செயல் என்று கூறிய உச்ச நீதிமன்றம், மற்ற கொலை வழக்குகளில் பின்பற்றப்படுவது போல் சீரான தரநிலைகள் உள்ளதா என்று குஜராத் அரசுக்கு கேள்வியெழுப்பினார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி