45 ஆண்டு இருதரப்பு உறவு பைடன், ஜின்பிங் பரஸ்பரம் வாழ்த்து

பீஜிங்: சீனா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவின் 45ம் ஆண்டு நிறைவையொட்டி, இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். சீனா, அமெரிக்கா இடையேயான தூதரக உறவின் 45ம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘கடந்த 45 ஆண்டுகளில், சீனா, அமெரிக்கா இடையேயான உறவு பல ஏற்றத்தாழ்வுகளை கடந்து, ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது. இது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையையும் மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!