படுத்துக்கிட்டே பைக் ஓட்டி சாகசம் செய்த வாலிபர் கைது

சமயபுரம்: திருச்சி அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடுரோட்டில் பைக் சாகசம் செய்த வாலிபரின் வீடியோ வைரலானது.பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் சும்மாயிருந்தவர், இந்த பைக் அட்டகாசத்தால் கைது செய்யப்பட்டார். திருச்சி மண்ணச்சநல்லூரில் இருந்து தினந்தோறும் துறையூர் வழியாக நாமக்கல், ஆத்தூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ், லாரி, கார், டூவீலர்கள் அதிகளவில் சென்று வருகின்றன. மண்ணச்சநல்லூர் துறையூர் நெடுஞ்சாலை குறுகிய இருவழி சாலையாக உள்ளது. அடிக்கடி விபத்து, உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்ணச்சநல்லூர்- துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி அருகே வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி இயக்கி சாகசம் செய்தார்.

இதை அவருடன் வந்த மற்றொரு வாலிபர் செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விசாரணையில் பூனாம்பாளையம் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் நிகேஷ் (19) என்றும் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் சும்மா இருந்ததும் தெரிய வந்தது. 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் சென்டர் மீடியனில் மொபட் ஓட்டிச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்