பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்சி ஓட்டுநர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சவாரிக்கு செல்லும் போது மிரட்டப்படுவதாகவும், இதனால் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பைக் டாக்சி அசோசியேஷன் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு பைக் டாக்சி அசோசியேஷன் சார்பில் குமார் என்பவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ைப டாக்சி சேவையின் மூலம் பயன்பெறுகின்றனர். இந்த பைக் டாக்சி சேவையின் வாயிலான எங்களை போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் எங்களை போன்ற பைக் டாக்சி ஓட்டுனர்களை ஒரு சில ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்கின்றனர். எனவே எங்களை அச்சறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!