பைக் மீது அரசு பேருந்து மோதியதில் உடல் நசுங்கி கூலித்தொழிலாளி பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில், உடல் நசுங்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரமேரூர் அருகே வாடாநல்லூர் பருத்திக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (60), ஏயாதி (55). இருவரும் கூலித்தொழிலாளிகள். இந்நிலையில், அவர்கள் இருவரும், பைக்கில் செங்கல்பட்டு சாலையில் உள்ள அ.பி.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, போரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அ.பி.சத்திரம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் டையரில் இருசக்கர வாகனம் சிக்கி சீனுவாசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், ஏயாதி பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற உத்திரமேரூர் போலீசார், இறந்தவர் உடலையையும், காயமடைந்தவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம்