பீகாரில் 25 ஆண்டுக்கு பின் 5 பெண் எம்பிக்கள்

பாட்னா: பீகாரில் 25 ஆண்டுகளுக்கு பின் 5 பெண் எம்பிக்கள் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 5 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது பீகாரும் ஜார்கண்டும் ஒருங்கிணைந்த மாநிலங்களாக இருந்தன. இம்முறை நடந்த தேர்தலில் 39 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்தியா கூட்டணி சார்பில் 6 பெண் வேட்பாளர்களும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 4 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இவர்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 4 பெண் வேட்பாளர்களும் வெற்றிப் பெற்றனர். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளரான லாலுவின் மகள் மிசா பாரதி மட்டும் வெற்றி பெற்றார். கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 3 ெபண் எம்பிக்கள் தேர்வான நிலையில், தற்போது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் இருந்து 5 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு