பீகார் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து ஆபீஸ் வர தடை

பாட்னா: பீகாரில் கல்வி துறை ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரும் போது ஜீன்ஸ்,டி சர்ட் அணிந்து வருவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக பீகார் மாநில கல்வி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள் கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. இது அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது. கல்வி அலுவலகங்களுக்கு சாதாரண உடையில்தான் வரவேண்டும். ஊழியர்கள் எளிமையான,வெளிர்நிற உடைகளை அணிய வேண்டும்.

அலுவலக கலாசாரத்தை பின்பற்றுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என பீகார் கல்வி துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில தலைமை செயலகத்தில் ஜீன்ஸ்,டி சர்ட் போன்ற உடைகளுக்கு தடை விதித்தது. மேலும் அதே நேரத்தில் சரண் மாவட்ட கலெக்டர் அனைத்து அரசு அலுவலகங்களில் ஜின்ஸ்,டி சர்ட் போன்ற உடைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி