பீகார் முதல்வர் நிதிஷூடன் சிராக் பஸ்வான் சந்திப்பு

பாட்னா: பீகாரின் ரூபாலி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற ஐக்கிய ஜனதா தளத்துக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை என கூறப்படுகிறது.

இந்நிலையில் லோக் ஜனசக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் முதல்வர் நிதிஷ் குமாரை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது பீகாரில் தொடரும் பால விபத்துகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும் ரூபாலி பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினருக்கு தன் முழு ஆதரவை தருவதாக சிராக் பஸ்வான் உறுதி அளித்தார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு