பீகார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத்தடை

பாட்னா: பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்து, ரூ.500 கோடி நிதி ஒதுக்கி, இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் ஜனவரி 7 முதல் 21ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, “சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த மாநில அரசுகளுக்கு உரிமையில்லை.

ஒன்றிய அரசுக்கே உரிமை உள்ளது என பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று பட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களை இறுதி உத்தரவு வரும் வரை யாரிடமும் பகிராமல், பாதுகாக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜுலை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related posts

செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சீரமைப்பு

பிரதமர் மோடியின் கடவுள் அதானி: அரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி தாக்கு

மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாட்டிலைட் நகரத்திற்கு கிராமங்கள் தேர்வு: சர்வதேச தரத்திற்கு மாற்ற முடிவு