பீகாரில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பயணிகளுக்கு காயமில்லை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

பாட்னா: பீகாரில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பீகாரில் ஹியூல் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயில் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ பிற பெட்டிகளுக்கு மளமளவென பரவி பயங்கரமாக பற்றி எரிந்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து தப்பினர்.

இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்த நிலையில் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்