விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35: இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டிற்கு மகராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள உற்பத்தியைப் பொறுத்து, அங்குள்ள நாசிக் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது தான் வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது. இதனால், அங்கிருந்து மிகக்குறைந்த அளவே வெங்காயம் வருகிறது. இதனால் மகராஷ்டிரா வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மகராஷ்டிராவில் இருந்து வங்கதேசம், இலங்கை, துபாய், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதியாகி வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, கடந்த மாதம் ரூ.35 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 1 கிலோ பெரிய வெங்காயம், தற்போது ரூ.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகார துறையின் கீழ் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்ஓசி) வெங்காயம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வெங்காய விலை உயர்வால் நுகர்வோர் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் விற்கப்படும் வெங்காயம் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த பகுதிகள் ரபி 2023-24 பருவத்தில் பெரிய அளவிலான வெங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பங்குகளை கொள்முதல் செய்த பின்னர், சந்தையில் விலைகளை நிலைப்படுத்த அரசாங்கம் அதன் விற்பனையை இப்போது தொடங்கியுள்ளது. பொதுமக்கள் எளிதாக வெங்காயத்தை வாங்குவதற்காக சென்னையில் ெமாபைல் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேன்கள் பரபரப்பான சந்தைகள், குடியிருப்பு பகுதிகள், வீட்டுவசதி சங்கங்கள், முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டு விற்பனையை தொடங்கியுள்ளது. நடமாடும் வேன்கள் தினசரி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்க போக்கைக் கட்டுப்படுத்தவும். மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு இது போன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை