டேனியல் சாம்ஸ் 25 ரன், பேங்க்ராப்ட் 21, ஆலிவர் டேவீஸ் 20 ரன் எடுத்தனர். ஹோபர்ட் தரப்பில் பேட்ரிக் டூலே, கிறிஸ் ஜோர்டன், நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட், நாதன் எல்லிஸ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 2வது வெற்றியை வசப்படுத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக பென் மெக்டர்மாட் ஆட்டமிழக்காமல் 53 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மெகாலிஸ்டர் ரைட் 34 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), கேலப் ஜுவல் 31 ரன் விளாசினர். சிட்னி பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, மெக்ஆண்ட்ரூ தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கிறிஸ் ஜோர்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.