பைடன் உடல் நிலை தேறி வருகிறது: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 17ம் தேதி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டெலாவேரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அதிபர் பைடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். கொரோனா தொற்றினால், உடல் நிலை பிரச்னைகள் மற்றும் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதில் கட்சிக்குள்ளே இருந்து வரும் எதிர்ப்பு போன்றவற்றால் ஜோ பைடன் கடும் அழுத்தத்தில் உள்ளார்.

கொரோனா தொற்றால் தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக அவர் நிறுத்தியுள்ளார்.பைடனின் உடல்நிலை குறித்து அதிபரின் மருத்துவர் கெவின் சி ஓ கானர் வெள்ளை மாளிகைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். கொரோனா தடுப்புக்கான 6வது டோஸ் மாத்திரை எடுத்துள்ளார்.அவருக்கு தொடர்ந்து இருமல், தொண்டை கரகரப்பு இன்னும் உள்ளது. எனினும்,ரத்த அழுத்தம்,சுவாச விகிதம், வெப்ப நிலை ஆகியவை வழக்கமான நிலையில் உள்ளது. சிகிச்சையில் இருந்த போதும் தனது பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!

சேரன்குளம் அமுதா வழக்கு; புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது..!!