பைடன், டிரம்ப் நிர்வாகத்திலும் ஈரான் ஹேக்கர்கள் கைவரிசை: மெட்டா அதிர்ச்சித் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசு கட்சிகளின் அதிபர் தேர்தல் பிரசாரக்குழுக்களை வேவு பார்த்ததாக நம்பப்படும் அதே ஈரானிய ஹேக்கர்கள் குழு தற்போதைய அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சிகளில் அரசு உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளை குறிவைத்ததாக மெட்டா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால் அமெரிக்கா மீதான ஈரானின் கோபம் அதிகரித்துள்ளது.

இதனால் இரு நாடுகளின் உறவு மேலும் மோசமடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிகளின் தேர்தல் பிரசார குழுக்களை ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஹேக் செய்ததாகவும், இந்த சைபர் தாக்குதலில் அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான ஈரானின் நேரடி தலையீடு என்றும் அமெரிக்க உளவுத்துறையான எப்பிஐ கடந்த வாரம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், பிரசார குழுக்களை மட்டுமின்றி, தற்போதைய அதிபர் பைடன் ஆட்சியிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியிலும் கூட அமெரிக்காவின் உயர் அதிகாரிகளின் வாட்ஸ் அப் கணக்குகளை அதே ஈரானிய ஹேக்கர்கள் குழு குறிவைக்க முயற்சித்ததாக மெட்டா நிறுவனம் பரபரப்பு தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் சந்தேகத்திற்கு இடமான தகவல்களை பெற்ற அதிகாரிகள் புகார் செய்ததன் மூலம், ஹேக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் முயற்சியை தோல்வி அடையச் செய்ததாக மெட்டா தெரிவித்துள்ளது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது