புவனேஷ்வரில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள்..!!

புவனேஷ்வர்: புவனேஷ்வரில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். போல் வால்ட் போட்டியின் மகளிர் பிரிவில் ஏற்கனவே தங்கம் வென்ற தமிழ்நாடு நேற்று ஆடவர் பிரிவிலும் தங்கம் வென்றது. போல் வால்ட் போட்டியில் தமிழ்நாடு வீரர் சிவா 5.11 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் சந்தோஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு வீரர் சந்தோஷ்குமார் 49.52 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 49.52 வினாடிகளில் இலக்கை எட்டியதை அடுத்து ஆசிய விளையாட்டு போட்டிக்கு சந்தோஷ்குமார் தகுதி பெற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம் வென்றார். 56.01 வினாடிகளில் இலக்கை எட்டியதால் ஆசிய விளையாட்டு போட்டிக்கு வித்யா ராம்ராஜ் தகுதி பெற்றார்.

நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.98 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் டேவிட் 7.94 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தனுஷா, பேபி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஆடவர் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் ஆரோக்ய ராஜீவ், சதீஷ், சந்தோஷ்குமார், அருள் ராஜலிங்கம் குழு தங்கம் வென்றது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்