பீமநாடு வெள்ளீலங்குன்று பகவதி அம்மன் கோவிலில் தாலப்பொலி திருவிழா

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே தச்சநாட்டுக்கரை பீமநாடு வெள்ளீலங்குன்று பகவதி கோவிலில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. அலங்கரித்த யானைகள் மீது பஞ்சவாத்யங்கள் அதிர அம்மன் பவனி வந்தார். கார்த்திகைத் தீபத்திருவிழாவை முன்னிட்டு இந்த பகவதி அம்மன் கோவில் ஆண்டுந்தோறும் தாலப்பொலி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. கோவில் தந்திரி சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் விஷேச பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் திரளாக கலந்து கொண்டனர். தச்சநாட்டுக்கரை நான்கு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிறுவர் சிறுமியர் அகல் விளக்குகள் ஏந்தி பவனி வந்து அம்மனை வழிப்பட்டனர். திரளாக பக்தர்கள் விழாவில் கலந்துக்கொண்டு அம்மனை தரிசித்தனர்.

நேற்று மாலை 5 மணிக்கு கோவில் வளாக மைதானத்தில் அலங்கரித்த 9 யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தபின் அணிவகுப்புடன் நின்று பஞ்சவாத்யங்கள் அதிர மக்களுக்கு காட்சியளித்தார்.பக்தர்கள் கோவில் சுற்றுப்பிரகாரத்திலுள்ள அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு இசைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை