பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில்;

ஈரோடு மாவட்டம், 2023-2024ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் 16.06.2023 முதல் 13.10.2023 வரை 5184 மில்லியன் மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டம், பவானி. ஈரோடு. மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு 16.06.2023 முதல் 31.10.2023 வரை தினசரி வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை