மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது வீரவணக்கங்கள் : ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை :மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது வீரவணக்கங்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு என்று எண்ணி வியந்தவரும், வடபுலத்து நீரின் மிகையால் தென்னகத்தை செழிக்கச் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவரும், நாடும் வீடும் வாழ வேண்டுமென்று விரும்பியவரும், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கவிதை எழுதிய பன்மொழிப் புலவரும், சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று பாடிய தீர்க்கத்தரிசியுமான மகாகவி பாாதியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது வீரவணக்கங்கள். இந்நாளில் பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் உறுதி ஏற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமது எழுத்துக்களால், சுதந்திரப் போராட்டத்தில் வீரம் விதைத்த புரட்சியாளர், பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி பேசிய முன்னோடி, மண் உள்ள காலம் வரை மறக்க முடியாத நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி. பன்மொழி வித்தகர். இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் கனவு, இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் நனவாகி வருகிறது. மகாகவியின் இறவாப் புகழ் போற்றி வணங்குகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு