Sunday, October 6, 2024
Home » பாஜவின் வெற்றி, இந்த நாட்டின் தோல்வி மத்தியில் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வர வேண்டும்

பாஜவின் வெற்றி, இந்த நாட்டின் தோல்வி மத்தியில் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வர வேண்டும்

by Lakshmipathi

*நெல்லையில் கனிமொழி எம்.பி. பேச்சு

நெல்லை : பாஜவின் வெற்றி, இந்த நாட்டின் தோல்வியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என நெல்லையில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ என்னும் தலைப்பில் பாளை பெல் மைதானத்தில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் (நெல்லை கிழக்கு) ஆவுடையப்பன், (தென்காசி தெற்கு) ஜெயபாலன், ஞானதிரவியம் எம்பி, அப்துல்வகாப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் வரவேற்றார். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன், வசந்தம் ஜெயக்குமார், சுரேஷ் மனோகரன், சிவராஜ் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘மாநில உரிமைகள் மற்றும் அடையாளங்களை அழிப்பதையே ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு புரியும் பெயரை வையுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளில் பெயர்களை வைப்பதே அவர்கள் வேலையாக உள்ளது. பிரதமர் மோடி பல இடங்களில் திருக்குறளை கூறுகிறார். தமிழை பழமையான மொழி என்கிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி வளர்ச்சிக்கு அள்ளி கொடுக்கிறார். நம் தாய்மொழியாம் தமிழ் வளர்ச்சிக்கு கிள்ளி கொடுக்கிறார். தென்மாநிலங்களில் இருக்கும் நாம் அனைவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

ஜிஎஸ்டி பணத்தை நம்மிடம் இருந்து வாங்கி கொண்டு, திரும்ப கொடுப்பதே இல்லை. தமிழ்நாட்டிற்கு 26 பைசா, கேரளாவிற்கு 62 பைசா என நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு சார்பில் திரும்ப கொடுக்கப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திற்கு மட்டும் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரிக்கு, திரும்ப 2ரூபாய் 2 பைசா கொடுக்கப்படுகிறது. அங்கு மட்டும் ஜிஎஸ்டி தொகை இருமடங்காக திரும்ப அளிக்கப்படுகிறது.

இதையெல்லாம் மீறி தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. சென்னை வெள்ளத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் துன்பங்களை அனுபவித்தனர். நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்துவிட்டு சென்றாரே ஒழிய, நிவாரணமாக இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு முதல் இதுவரை பாஜவிற்கு 6,564 கோடி நிதி கிட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த தொகையை மொத்தமாக கூட்டினால் இத்தொகை வராது. தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றது தவறு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, இஸ்லாமியர்களுக்கு, தொ ழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராடும் விவசாயிகள் மீது ஒன்றிய அரசு டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ, தொழிலாளர் விரோத சட்டங்கள் என ஒன்றிய அரசு அனைவருக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது.

மக்களை பற்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தை பற்றி ஒன்றிய அரசுக்கு அக்கறையே இல்லை. மத அரசியலை முன்னிறுத்தி பாஜ ஆட்சி நடத்துகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1.15 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 2.60 லட்சம் பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், அனைத்து மாநிலங்களிலும் இன்று நூறு நாள் வேலைத்திட்டத்தில் பலர் சம்பளம் இல்லாமல் தவிக்கின்றனர்.

பல கிராமங்களில் வேலையும் வழங்கப்படுவதில்லை. நாட்டின் இறையாண்மையை பாஜ சிதைத்து வருகிறது. பாஜவின் வெற்றி, இந்த நாட்டின் தோல்வியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர்.ஜெகதீஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, லெட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிப்பாண்டியன், வக்கீல் பிரபாகரன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாநில சட்டத் திட்டக்குழு உறுப்பினர் சுப.சீதாராமன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், பாளை ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.தங்கபாண்டியன், போர்வெல் கணேசன், வேலாங்குளம் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன்,

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, ராதாபுரம் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏஆர்.ரகுமான், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலன்குளம் கண்ணன், மாவட்ட பிரதிநிதி செல்லக்கோபால், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, துணை அமைப்பாளர் தவசிராஜன், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் நவ்ஷாத், தலைவர் முகமது அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், ஒன்றிய செயலாளர்கள் நாங்குநேரி ஆரோக்கிய எட்வின்,

மானூர் அருள்மணி. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி சுகாதார குழு சேர்மன் ரம்ஜான் அலி, கவுன்சிலர் ஆமீனா சாதிக், தொமுச முகம்மது சைபுதீன், சுற்றுச்சூழல் அணி ெபரோஸ்கான், கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் முத்தமிழ் ராஜா பாண்டியன்,பஞ்சாயத்து தலைவர்கள் கீழநத்தம் அனுராதா ரவிமுருகன், கான்சாபுரம் வேல்துரை, ஒன்றிய துணை செயலாளர்கள் செல்லத்துரை, சுரேஷ், பொருளாளர் செல்வசங்கர், கிழக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் இசக்கி பாண்டி, மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பலராமன்,

துணை அமைப்பாளர் வீரபாண்டியன், மண்டல தலைவர்கள் நெல்லை மகேஸ்வரி, மேலப்பாளையம் கதிஜா இக்லாம் பாசிலா, ஐடி விங்க் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, வக்கீல் அலீப் மீரான், மகாராஜன், மாரிச்சாமி, நெல்லையப்பன், முகமது இலியாஸ், இளைஞரணி மகாராஜன், பெருமாள், மணி, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் சாலி மவுலானா, ஜாபர், சிக்கந்தர். சாகுல், பேச்சிமுத்து, முன்னாள் பொருளாளர் அருண்குமார், ராவணன், ஷேக் உஸ்மானி, சமுத்திரம், கண்ணன், அருணாசலம், மணி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

7 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi