மைவீத்ரி நிறுவனத்துக்கு சிறந்த மக்கள் நல விருது

சென்னை: மத்திய அரசின் அமைப்பான பாரத் சேவாக் சமாஜ் ஆனது 1952ம் ஆண்டு அப்போதைய தேசிய தலைவர்கள் பண்டிட் ஜவஹர்லால் நேரு, குல்சரிலால் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது. 71 ஆண்டுகளாக பொது சேவையில் செயலாற்றி வரும் இவ்வமைப்பின் தேசிய சேர்மன் பாலசந்தரன் தலைமையில் சிறப்பு பயிற்சி வகுப்பு தனியார் விடுதியில் நடந்தது. பிஎஸ்எஸ் மூலம் 500க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பிஎஸ்எஸ்-ன் மாற்று மருத்துவ வேந்தரான சுசான்லி ரவி சித்வா குரூப்ஸ் ஆப் நிறுவனங்களின் சேர்மன் விஜயராகவ், பிஎஸ்எஸ்-ன் மென்டார் டார்லிகோஷி மற்றும் மைவீத்ரி நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் கலந்து கொண்டார். மைவீத்ரி நிறுவனம் என்பது ஏறக்குறைய 32 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்தி, பொருளாதாரத்தையும், உயர்த்தியுள்ளது.

இது மிகப்பெரிய சாதனை. உழைப்பும், நம்பிக்கை, தன்மையும் உள்ளதனை காண முடிகிறது. அதனடிப்படையில் நிறுவனத்தின் அதிபர் சக்தி ஆனந்தனுக்கு தொழில் முனைவோரின் சிறந்த வழிகாட்டிக்கான விருது வழங்கப்பட்டது. மைவீத்ரி நிறுவனத்திற்கு சிறந்த மக்கள் நல நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், அகில இந்திய பிஎஸ்எஸ் அமைப்பின் சேர்மனுக்கு பாரத சேவக் சமாஜின் கடவுளின் தந்தை என்ற விருது வழங்கப்பட்டது. விஜயராகவனுக்கு தெய்வீக இயற்கை மருத்துவத்தின் சிறப்பு மருவத்துவர் என்ற விருது வழங்கப்பட்டது. சக்தி ஆனந்தன் நன்றி கூறினார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்