சிறந்த நர்ஸ் என கலெக்டரிடம் விருது பெற்றவர் நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் செவிலியர் கண்காணிப்பாளர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 25 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வந்த ஷீலா (55), கடந்த மார்ச் மாதம் செவிலியர் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் ஷீலா, நோயாளிகளிடம் கடந்த 2 நாட்களாக லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். அதற்கு பின்னர் ஷீலா, உள்நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

காட்டுக் கோழி (Junglefowl)

முதுநிலைப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்