சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம்

சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் எவை என்பது குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஆசிரியர்களின் திறன், ஆசிரியர்களின் நலன் மற்றும் மேம்பாடு, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல், வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள், தலைமைத்துவம், நிர்வாகத்தகுதி, ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசு கல்லூரிகளில் 54 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது முறையாக 3வது இடத்தை பெற்று இருக்கிறது. மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி, வேலூர் முத்துரங்கன் அரசு கலைக் கல்லூரி ஆகியவையும் இடம் பெற்றிருக்கிறது. இதேபோல், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் பட்டியலில் தமிழ் நாட்டில் இருந்து 61 கல்லூரிகளும், தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகள் பட்டியலில் 8 கல்லூரிகளும் இடம் பெற்று உள்ளன. இதுதவிர, 34 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது