சிறந்த நடிப்பாற்றல், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் மாரிமுத்து மறைந்த செய்தி அதிர்ச்சியை தந்தது: கி.வீரமணி நேரில் அஞ்சலி

சென்னை : இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் முடித்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பிய போது இயற்கை எய்தினார். பின்னர், இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து உடலுக்கு திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் மாரிமுத்து மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை தந்தது. பிரபலமான சன் டிவி எதிர்நீச்சல் தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது. திராவிட கழகம் சார்பில் நடிகர் மரிமுத்துவுக்கு பெரியார் விருது அளிக்க முடிவு செய்திருந்தோம். தனது பேட்டிகளில் கடவுள் நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கையை மிகவும் அம்பலப்படுத்தி வெளிப்படையாக பேசியவர். நடிகர் மாரிமுத்து அளித்த பேட்டிகளின் மூலம் பெரியார் கொள்கையாளர் என்பதை அறிந்தோம். எதிர்நீச்சலியே எதிர்நீச்சல் போட்டவரின் இழப்பு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கலை உலகத்திற்கு மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களின் உலகத்திற்கும் அவர்களுடைய இயக்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. என்று அவர் கூறினார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி