பெங்களூரு கபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி ஒன்றிய அமைச்சர் பேசிய வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என்று மத்திய இணையமைச்ர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஹரிபிரசாத் ஆஜரானார். காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் தர முடியாது. தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தனக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் முன் கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்