பெங்களூருவில் திடீர் கலவரம் கடைகளில் ஆங்கில பெயர் பலகைகள் உடைப்பு: கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் கைது

பெங்களூரு: கர்நாடக ரக்‌ஷண வேதிகே (நாராயண கவுடா பிரிவு) அமைப்பினர் பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், மால்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கன்னடத்தில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள சாதனஹள்ளி சுங்கச்சாவடியில் இருந்து பெங்களூரு கப்பன் பூங்கா வரை ஊர்வலம் நாராயணகவுடா தலைமையில் நடத்தினர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் யலகங்கா அடுத்த உணசமாரனஹள்ளி பகுதியில் உள்ள டோயோடோ ஷோரூம், மால் ஆப் ஏசியா உள்பட பல நிறுவனங்கள், நடத்திர ஓட்டல்களில் நுழைந்து கற்களாலும், கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த ஆங்கில பெயர் பலகைகளை அடித்து நொறுக்கினர். ஆங்கில எழுத்துக்களை வண்ணம் பூசியும் அழித்தனர். மகாத்மா காந்தி சாலையில் உள்ள கனரா வங்கியில் எழுதி இருந்த ஆங்கிலம், இந்தி மொழி பெயர் பலகைகளை அழித்தனர். ஆங்கில பெயர் பலகை அழிக்கும் போராட்டம் நடத்திய ரக்‌ஷண வேதிகே தொண்டர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். இதனால் பெரும்பான்மையான பெரிய மால்கள், ஷோரூம்கள் அவசர அவசரமாக மூடினர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்