பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். எம்டிஎம்ஏ போதைப்பொருளை சிறுக சிறுக தனது காரில் கடத்திச் சென்று ஆலுவாவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பதுக்கி வந்தார். அப்பார்ட்மெண்டில் போதைப்பொருள் பதுக்கி வருவதாக திருச்சூர் போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து ஒல்லூரில் பாசிலின் கார் வந்தவுடன் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் போதைப்பொருள் சிக்கியது. எம்டிஎம்ஏ போதை பொருளை நூறு மாத்திரைகளுக்குள் அடைத்து பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பாசிலை கைதுசெய்து போலீசார் விசாரித்ததில் சிறுக சிறுக ரூ.1 கோடி போதைப்பொருளை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பாசிலுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது